வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டதில் அதிர்ச்சியான நடிகை

அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு வருத்தமாகவும் உள்ளது.

News image
படங்கள் - instagram.com/ridhimapandit/
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:41 am

DIN

இந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. வூட் செலக்ட் செயலியில் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 13 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார்கள். பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் 15 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பு, ஆறு வாரங்களுக்கு வூட் செலக்ட் ஓடிடியில் வெளியாகிறது. 

பிக் பாஸ் ஓடிடியிலிருந்து நடிகை ரிதிமா பண்டிட் சமீபத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கூறியதாவது:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிறைய மாற்றங்கள் உருவாகி வருகின்றன. பிற்போக்கான விஷயங்கள் எல்லாம் மாற்றப்பட்டு முற்போக்கான கருத்துகள் இடம்பெறுகின்றன. 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து என்னை வெளியேற்றியதால் நான் வேதனையடைந்தேன் என்பதை விடவும் அதிர்ச்சியானேன். என்னால் நிறைய செய்திருக்க முடியும். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு வருத்தமாகவும் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லாதது குறித்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் எண்ணினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் இடம்பெறுவேன் என்றார். 

ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள், இணையத் தொடர்களில் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார் ரிதிமா பண்டிட். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.