பாடகர் அறிவின் புதிய பாடல் இன்று வெளியீடு
சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமான 'அரண்மனை-3' தற்போது திரையில் வெளியாக இருக்கிற நிலையில் அப்படத்தின் முதல் பாடலை இன்று (ஆக -29 ) மாலை படக்குழு வெளியிடுகிறார்


சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமான 'அரண்மனை-3' தற்போது திரையில் வெளியாக இருக்கிற நிலையில் அப்படத்தின் முதல் பாடலை இன்று (ஆக -29 ) மாலை படக்குழு வெளியிடுகிறார்கள்.
இதையும் படிக்க | ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் - ரஜினி சந்திப்பு
சி.சத்யா இசையமைப்பில் 'ரடரடப்படா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை பாடலாசிரியரும் , பாடகருமான அறிவு எழுதிப் பாடியிருக்கிறார். தனித்துவமான பாடல் வரிகளை எழுதும் அறிவு இப்படத்தில் பங்காற்றியிருப்பதால் இந்த பாடலுக்கு ஆவல் எழுந்துள்ளது.
மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...