ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிம்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த விஷால் ?: வடிவேலுவுக்கு பாராட்டு

நடிகர்கள் சிம்பு மற்றும் வடிவேலு மீதான தடையைத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது குறித்து நடிகர் விஷால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 6:01 am

DIN

நடிகர்கள் சிம்பு மற்றும் வடிவேலு மீதான தடையைத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது குறித்து நடிகர் விஷால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 

நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அவர் நடித்து வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷாலிடம், தயாரிப்பாளர் சங்கம் சிம்பு மற்றும் வடிவேலு மீதான தடையை நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என பதிலளித்தார். 

Story image

பின்னர் வடிவேலு குறித்து மீண்டும் செய்தியாளர்கள் அழுத்திக் கேட்டபோது,  ''ஒரு ரசிகனாக நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். கடினமான சூழ்நிலைகள் மற்றும் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகு கவுண்டமணி மற்றும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளைத் தான் முதலில் பார்ப்பேன். 

Story image

வடிவேலு மக்களைத் தனது நகைச்சுவையால் மகிழ்வித்து வருகிறார். அது சாதாரண காரியம் இல்லை. நீண்ட இடைவேளை ஆகிவிட்டது. பரவாயில்லை. அவர் நிறைய படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.