தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆஸ்கர் பட்டியலில் 'கூழாங்கல்' : விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

ஆஸ்கர் விருது பட்டியலில் 'கூழாங்கல்' திரைப்படம் இடம்பெற்றிருப்பது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 டிசம்பர் 2021, 9:45 am

DIN

பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிடுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்களுக்கான வெளிநாட்டு படங்கள் பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்து விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இந்தப் பட்டியலில் இருந்து இறுதியாக 15 படங்கள் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கன அறிவிப்பு வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.