வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

'ஜலபுல ஜங்கு': சிவகார்த்திகேயனின் டான் பட பாடல் வெளியானது

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இருந்து ஜலபுலஜங்கு என்ற பாடல் வெளியானது. 

News image
Updated On :16 டிசம்பர் 2021, 12:35 pm

DIN

'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டான்'. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், ஆர்ஜே விஜய், சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கல்லூரி பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சில காட்சிகளில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் பள்ளி மாணவர்களாகவும் நடித்துள்ளனராம்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஜலபுலஜங்கு என்ற பாடலின் ப்ரமோ நேற்று (16/12/2021) வெளியானது. இந்த நிலையில் முழு பாடலும் தற்போது வெளியாகியுள்ளது. ரோகேஷ் எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.