தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இயக்குநர் ஹரி - அருண் விஜய்யின் 'யானை': டீசர் குறித்து வெளியான தகவல்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் யானை படத்தின் டீசர் வருகிற 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :20 டிசம்பர் 2021, 11:56 am

DIN

அருண் விஜய்யின் தங்கை ப்ரீத்தா விஜயகுமாரை இயக்குநர் ஹரி திருமணம் செய்துள்ளார். உறவினர்களான இயக்குநர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் நீண்ட நாட்களாக இணையாமல் இருந்தனர். 

இதனையடுத்து யானை படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் நடிகை ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Story image

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.