மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் மறைவு

தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் கே.எஸ். சேது மாதவன் காலமானார். அவருக்கு வயது 90. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:44 pm

DIN


தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் கே.எஸ். சேது மாதவன் காலமானார். அவருக்கு வயது 90. 

ஓடையில் நின்னு, மறுபக்கம் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களை சேது மாதவன் இயக்கியுள்ளார். ஏரளமான மலையாளப் படங்களை இயக்கியதோடு தமிழ், ஹிந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். சிறந்த இயக்கத்துக்காக 4 விருதுகள் உள்படம் 10 தேசிய விருதுகளையும் 9 கேரள அரசின் விருதுகளையும் பெற்றார். 2010-ல் மலையாளத் திரையுலகின் பங்களிப்புக்காக கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருதைப் பெற்றார். 

1931-ல் பாலக்காட்டில் பிறந்த சேது மாதவன், கடந்த சில வருடங்களாக சென்னையில் வசித்து வந்தார். சேது மாதவன் இயக்கிய தமிழ்ப் படமான மறுபக்கம், 1991-ல் சிறந்த படமாகத் தேசிய விருது பெற்றது. இந்த விருதைப் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றது. மலையாளத் திரையுலகில் கமல் ஹாசனை அறிமுகம் செய்த பெருமையும் அவருக்கு உண்டு. கடைசியாக 1995-ல் படம் இயக்கினார். 

சென்னையில் வசித்த வந்த கே.எஸ். சேது மாதவன், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு மனைவியும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளார்கள். சேது மாதவனின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.