சூர்யா 40: படப்பிடிப்பு தொடக்கம்!
சூர்யா - பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம்.
இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.
பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான்.
இந்நிலையில் சூர்யா - பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. பூஜை நிகழ்வில் சூர்யா தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யா அதிலிருந்து மீண்டு வந்து தற்போது ஓய்வில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...