ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

விஷாலின் சக்ரா படத்தை வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சக்ரா படத்தைத் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2021, 11:34 am

DIN

சென்னை, பிப்.16: நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர் நடித்துள்ள படம் - சக்ரா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடப்படுகிறது. 

கடந்த மே 1-ம் தேதி படம் வெளிவருவதாக இருந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் வெளியீடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு, பிப்ரவரி 19 அன்று சக்ரா படம் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ரவி தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: 

நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்திருந்தார். அந்தப் படத்தை தயாரிக்க எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் ஒப்பந்தத்தை மீறி அந்த படத்தை விஷாலே தயாரித்து, அவரது நடிப்பில் அந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக விளம்பரம் செய்யப்படுகிறது. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் சக்ரா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி  இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு தொடர்பாக நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.