நடிகை கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை!
தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றார்.


நடிகை கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
2012-ல் நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் திருமணம் செய்துகொண்டார்கள். 2016-ல் மகன் பிறந்தான். தைமூர் அலி கான் எனப் பெயர் சூட்டினார்கள்.
2-வது குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாக கரீனா கபூரும் சயிப் அலி கானும் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி சயிப் அலி கான் கூறியதாவது:
எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றார்.
நடிகர் ஆமிர் கானின் அடுத்த படமான லால் சிங் சத்தா-வில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கரீனா கபூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...