ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜேம்ஸ் பாண்ட் நடிகை காலமானார்

எ வியூ டூ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்தார்...

News image
படம் - ஏபி
Updated On :6 ஜனவரி 2021, 11:01 am

DIN

பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார். அவருக்கு வயது 65.

1975-ல் ஃபோர்ட்ஸ்டு என்ட்ரி என்கிற படத்தில் அறிமுகமான டான்யா, எ வியூ டூ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்தார். 1994-ல் கடைசியாகப் படங்களில் நடித்தவர், தொலைக்காட்சித் தொடர்களில் அதிகமாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். பேரி ராபர்ட்ஸை 1974-ல் திருமணம் செய்தார். 

கிறிஸ்துமஸுக்கு முன் தினம் தனது செல்ல நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது மயங்கி விழுந்தார் டான்யா. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்யா இறந்துவிட்டதாக அவருடைய கணவர் தகவல் தெரிவித்தார். எனினும் டான்யா இறக்கவில்லை, மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் டான்யாவின் மரணம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான்யாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.