கேஜிஎஃப் டீசருக்கு மகத்தான வரவேற்பு!

டீசர் வெளியிடப்பட்ட 14 மணி நேரத்தில் 21 மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் பெற்றுள்ளது.
கேஜிஎஃப் டீசருக்கு மகத்தான வரவேற்பு!
Updated on
1 min read

யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். 

கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து கேஜிஎஃப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையில் படம் வெளியாகவுள்ளது. 

கதாநாயகன் யாஷின் 35-வது பிறந்த நாளுக்காக கேஎஃப் படத்தின் டீசர் நேற்றிரவு வெளியானது. 

இந்நிலையில் டீசர் வெளியிடப்பட்ட 14 மணி நேரத்தில் 21 மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் பெற்றுள்ளது. கே.ஜி.எஃப். படத்துக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்தளவுக்கு உள்ளது என்பதை இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com