இணையத்தில் வெளியானது மாஸ்டர் படம்: படக்குழு அதிர்ச்சி

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இணையத்தில் வெளியானது மாஸ்டர் படம்: படக்குழு அதிர்ச்சி
Updated on
1 min read

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்தார்கள்.

மாஸ்டர் படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சில நாள்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தளங்களில் கசிய விடப்பட்டன. இதையடுத்து மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தெரிவித்ததாவது: ஒன்றரை வருடப் போராட்டத்துக்குப் பிறகு மாஸ்டர் படத்தை உங்களுக்கு வழங்கவிருக்கிறோம். நீங்கள் திரையரங்குகளில் படத்தை ரசிப்பதற்காகத்தான் அத்தனையும் செய்துள்ளோம். கசிய விடப்பட்டுள்ள மாஸ்டர் படக்காட்சிகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம். ஒருநாள் காத்திருங்கள். அதன்பிறகு மாஸ்டர் படம் உங்களுக்கானது என்றார்.  

எனினும் மாஸ்டர் படம் வெளியான இன்றே இணையத்தளங்களிலும் முறைகேடாக வெளியாகியுள்ளது. சமூகவலைத்தளச் செயலியான டெலிகிராம் மற்றும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com