தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அந்தாதுன் ரீமேக்: ராதிகா ஆப்தே வேடத்தில் ராஷி கண்ணா

அந்தாதுன் மலையாள ரீமேக்கில் ராதிகா ஆப்தே வேடத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். 

News image
Updated On :25 ஜனவரி 2021, 5:33 am

DIN

அந்தாதுன் மலையாள ரீமேக்கில் ராதிகா ஆப்தே வேடத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். 

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் படம்  சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. 

அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார். பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் இயக்குகிறார். தபு வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். இசை - சந்தோஷ் நாராயணன்.

அந்தாதுன் படம் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது.

ஆயுஷ்மன் குரானா வேடத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்கும் இப்படத்தில் ராதிகா ஆப்தே வேடத்தில் ராஷி கண்ணா நடிக்கிறார். தபு வேடத்தில் மம்தா மோகன்தாஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா அடுத்ததாக துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.