தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரசிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா: படங்கள் & விடியோ

தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா, மணமக்களுக்கு ஆலோசனைகள் கூறி...

News image
Updated On :25 ஜனவரி 2021, 10:18 am

DIN

தனது ரசிகரின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் நடிகர் சூர்யா. 

சூர்யா நற்பணி இயக்கத்தில் உறுப்பினராக உள்ளவர் ஹரி. இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணம் சூர்யாவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா, மணமக்களுக்கு ஆலோசனைகள் கூறி, திருமண நிகழ்வில் நீண்ட நேரம் செலவிட்டு ரசிகர்களுடன் உரையாடியதாக சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இத்திருமணத்தின் புகைப்படங்களும் விடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து சூர்யா நடிக்கும் இரு படங்களும் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ஒரு படமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தயாரிப்பு - கலைப்புலி தாணு. 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம். இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. சூர்யா - பாண்டிராஜின் படத்துக்கு இசை - இமான். 

இதுதவிர நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நவரசா என்கிற படத்திலும் சூர்யா நடித்துள்ளார். மணி ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா நடிக்கும் கதையை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.