தனுஷின் கர்ணன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டு
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் படத்தைப் பாராட்டி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவு எழுதியுள்ளார்.


மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் படத்தைப் பாராட்டி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவு எழுதியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ்.
கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்துக்குப் பிறகு கர்ணன் படம் வெளிவரவுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன்.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது.
கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் பின்னணி இசைக்காக இப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது:
கர்ணன் படத்தைப் பார்த்தேன். அதிர்ந்தேன். தனுஷ், மாரி செல்வராஜ், தாணு மற்றும் படக்குழுவினர்... உங்களைக் கண்டு பெருமை கொள்கிறேன். கர்ணன் - அனைத்தும் கொடுப்பான் என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...