ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பா. இரஞ்சித்தின் சார்பட்டா: ஜூலை 22-ல் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு

பா. இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22 அன்று...

News image
Updated On :8 ஜூலை 2021, 9:49 am

DIN

பா. இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. 

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். 

ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி. சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது.

தமிழ்நாட்டில் திரையரங்குகள் எப்போது மீண்டும் இயங்கும் என்று தெளிவாகத் தெரியாத நிலை மற்றும் கரோனா அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.