தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிவா, யோகி பாபு நடிக்கும் காசேதான் கடவுளடா பட ரீமேக்

காசேதான் கடவுளடா படம் 1972-ல் வெளியாகி தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது.

Published On :

காசேதான் கடவுளடா படம் 1972-ல் வெளியாகி தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா நடித்த படம் நகைச்சுவைக் காட்சிகளுக்காக இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் உள்ளது. ஜம்புலிங்கமே ஜடாதரா, மெல்ல பேசுங்கள் போன்ற அபாரமான பாடல்களும் அப்படத்தில் இருந்தன. 

இந்நிலையில் காசேதான் கடவுளடா படம் ரீமேக் ஆகிறது. மிர்ச்சி சிவா இயக்கத்தில் ஆர். கண்ணன் இயக்குகிறார். முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாபு, மனோரமா கதாபாத்திரத்தில் ஊர்வசி நடிக்கிறார்கள். படத்தை இயக்குவதோடு தயாரிக்கவும் உள்ளார் ஆர். கண்ணன். படப்பிடிப்பு இந்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. 

சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தை இயக்கிய ஆர். கண்ணன் அடுத்ததாக அதர்வா நடிப்பில் தள்ளிப் போகாதே படத்தையும் இயக்கியும் தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற மலையாளப் படத்தை ரீமேக் செய்தும் வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.