தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லிங்குசாமி vs சீமான்

லிங்குசாமி, சீமான் ஆகிய இருவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார்கள். இதன்பிறகு கதையை மாற்றி...

News image
Updated On :9 ஜூலை 2021, 8:15 am

DIN

கதை விவகாரத்தில் இயக்குநர்கள் லிங்குசாமி - சீமான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சண்டக்கோழி 2 படத்தை 2018-ல் இயக்கிய லிங்குசாமி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி அடுத்ததாக இயக்குகிறார். ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டகோழி 2 ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். 2006 முதல் தெலுங்குப் படங்களில் ராம் பொத்தினேனி நடித்து வருகிறார். ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்துக்குத் தயாரிப்பு - ஸ்ரீனிவாசா சிட்டூரி. கீர்த்தி ஷெட்டி, நதியா நடிக்கிறார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

2013-ல் மும்பையைப் பின்னணியாகக் கொண்டு சூர்யா நடிப்பில் படமெடுக்க முடிவெடுத்தார் லிங்குசாமி. ஆனால் படப்பிடிப்புக்கு முன்பு இயக்குநர் சீமான், லிங்குசாமிக்கு எதிராக இயக்குநர் சங்கத்தில் புகாரளித்தார். லிங்குசாமி - சூர்யா படக்கதை தன்னுடைய பகலவன் கதையை ஒத்திருப்பதாக சீமான் கூறினார். அக்கதையை விஜய், விக்ரம், ஜெயம் ரவியிடம் கூறியதாகவும் இறுதியில் ஜெயம் ரவியை வைத்து பகலவன் கதையை இயக்கவுள்ளதாகவும் புகாரில் தெரிவித்தார் சீமான். இயக்குநர் விக்ரமன் தலைமையிலான குழுவினர் இரு தரப்பையும் அழைத்துப் பேசினார்கள். இருவர் கதைகளும் மும்பையைப் பின்னணியாகக் கொண்ட கதைகள் என்றாலும் ஒருவருக்கொருவர் இதில் சம்பந்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனினும் 10 ஆண்டுகளுக்கு முன்பே பகலவன் கதையை சீமான் எழுதிவிட்டதால் லிங்குசாமியின் கதையைத் தமிழில் எடுக்கக்கூடாது, ஆனால் மற்ற மொழிகளில் அக்கதையை இயக்கலாம் என பேசி ஒரு முடிவெடுக்கப்பட்டது. அப்போது லிங்குசாமி, சீமான் ஆகிய இருவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார்கள். இதன்பிறகு கதையை மாற்றி அதே மும்பையின் பின்னணியில் அஞ்சான் படத்தை சூர்யா நடிப்பில் இயக்கினார் லிங்குசாமி. 

இப்போது, 2013-ல் சர்ச்சைக்குள்ளான கதையைத் தெலுங்கில் இயக்கவுள்ளார் லிங்குசாமி. ராம் பொத்தினேனி படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12  அன்று தொடங்கவுள்ளது. இதையடுத்து திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகாரளித்தார் சீமான். ஆனால் சீமானின் புகாரில் முகாந்திரம் இல்லை. உடன்படிக்கையின்படியே லிங்குசாமி படம் இயக்கவுள்ளார் எனத் திரைப்பட எழுத்தாளர் சங்கம் கூறியுள்ளது. இதனால் சீமானின் புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி - ராம் பொத்தினேனி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.