ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் விஜய் போல் நடனம் ஆடும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது, புகைப்படங்கள், விடியோக்கள் பகிர்வது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களின் முகங்களுக்கு பதிலாக தனது முகங்களை அதில் இடம்பெறச் செய்து அவர் வெளியிடும் விடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் 'அண்ணாமலை' ரஜினி, '24' பட சூர்யா, 'பாகுபலி', 'கேஜிஎஃப்' என அவர் பதிவிடும் விடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.
இதையும் படிக்க | வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகீலா
அந்த வகையில் தற்போது 'தெறி' படத்தில் விஜய் - சமந்தா நடனமாடும் பாடலான செல்லக்குட்டி பாடலில் விஜய்யின் முகத்தை தனது முகமாக மாற்றி அவர் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவிற்கு நடிகர் டேவிட் விஜய், ஜோசஃப் வார்னர், தளபதி என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனை தான் வரவேற்கும் விதமாக சிரிக்கும் எமோஜியை பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெட்ரோல் நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

மேகாலயா: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு!

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

