பயத்துடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ராய் லட்சுமி (விடியோ)
விடியோவைப் பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கரோனா தடுப்பூசியை மிகுந்த அச்ச உணர்வுடன் செலுத்திக்கொண்ட நடிகை ராய் லட்சுமி, அதன் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
2005-ல் கற்க கசடற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராய் லட்சுமி. வெள்ளித்திரை, தாம் தூம், நான் அவனில்லை 2. பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசியை ராய் லட்சுமி செலுத்திக்கொண்டார். ஊசி பயம் கொண்டவர் ராய் லட்சுமி. இதனால் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது மிகவும் பயந்து போய் தனது கண்களை மூடிக்கொண்டார். ஊசி குத்தி முடித்தபோது அழும் நிலைமைக்குச் சென்றார்.
இன்ஸ்டகிராமில் இதன் விடியோவைப் பகிர்ந்துள்ள ராய் லட்சுமி, நிஜமாகவே டிரிபனோபோபியா (Trypanophobia) என்கிற ஊசி பயம் எனக்கு உண்டு. ஊசி செலுத்திக்கொள்வது எனக்குச் சாதாரண விஷயமில்லை. ஆனாலும் இதைச் செய்துகொண்டேன். விடியோவைப் பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...