என்னை நேரில் காண நீண்ட தூரம் பயணம் செய்து வரவேண்டாம் என நடிகை ராஷ்மிகா, ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அந்தப் படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலா பாடலில் நடித்து அதிக ரசிகர்களிடம் சென்றடைந்தார். 2016-ல் கிரிக் பார்ட்டி என்கிற கன்னடப் படத்தினால் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, சுல்தான் படத்தினால் தமிழில் அறிமுகமாகினார். அப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்தார்.
ஹிந்தியில் அதிகப் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ள ராஷ்மிகா, இதற்காக மும்பையில் குடியேறியுள்ளார். மிஷன் மஞ்சு என்கிற ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள ராஷ்மிகா, அமிதாப் பச்சன் நடிக்கும் குட்பை படத்திலும் நடித்து வருகிறார். இதனால் மும்பையில் ஒரு ஃபிளாட்டை வாங்கி தற்போது அதில் குடியேறியுள்ளார்.
ராஷ்மிகாவின் ரசிகரான தெலங்கானாவைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி, ராஷ்மிகாவை நேரில் காண்பதற்காக தெலங்கானாவிலிருந்து கர்நாடகத்துக்கு ரயிலிலும் ஆட்டோவிலும் 900 கி.மீ. பயணம் செய்தார். குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ராஷ்மிகாவின் வீட்டு முகவரியை அவர் விசாரித்தபோது சந்தேகம் கொண்ட பொதுமக்கள், ஆகாஷைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்தார்கள். ராஷ்மிகா மும்பைக்குச் சென்றுவிட்டதாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும் ஆகாஷை தெலங்கானாவுக்குத் திரும்பிச் செல்லும்படி காவலர்கள் அறிவுறுத்தினார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து ராஷ்மிகா ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
நீண்ட தூரம் பயணம் செய்து என்னைக் காண உங்களில் ஒருவர் முயன்றது பற்றி எனக்குத் தெரிய வந்தது. தயவுசெய்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். உங்களைச் சந்திக்க முடியாததால் நானும் வேதனையுடன் உள்ளேன். உங்களை ஒருநாள் சந்திக்க விருப்பப்படுகிறேன். தற்போதைக்கு சமூகவலைத்தளங்களில் என் மீதான அன்பைச் செலுத்துங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்கக் கோரிக்கை

சங்ககிரியில் சித்திரை தோ்த் திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பினாா் சுவாமி

வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

இந்திய யு20 தடகள அணியில் சாதனா ரவி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

