தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மகன் இறந்த இரண்டே வாரத்தில் கணவரையும் இழந்த நடிகை கவிதா

கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியவுடன் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார்.

News image
படம் - www.instagram.com/kavithadasaratharaj/
Updated On :30 ஜூன் 2021, 10:34 am

DIN


கரோனா பாதிப்பினால் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் ஆகிய இருவரையும் இரு வார இடைவெளியில் இழந்தார் நடிகை கவிதா. 

1976-ல் 11 வயதில் திரையுலகில் அறிமுகமானார் கவிதா. ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், அமராவதி, பாண்டவர் பூமி என ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். என்றென்றும் புன்னகை என்கிற தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியவுடன் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார். ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் கவிதா வசித்து வந்தார். 

கரோனாவின் 2-வது அலையில் கவிதாவின் கணவர் தசரத ராஜ், மகன் சாய் ரூப் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி இரு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் கரோனாவினால் பாதிக்கப்பட்ட கவிதாவின் கணவர் தசரத ராஜும் உயிரிழந்தார். இரு வார இடைவெளியில் கணவர், மகன் ஆகிய இருவரையும் இழந்த கவிதாவுக்குத் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.