12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கர்ணன் படத்தின் 2-வது பாடல்: நாளை வெளியீடு!

கர்ணன் படத்தின் 2-வது பாடல் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :


கர்ணன் படத்தின் 2-வது பாடல் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 18 அன்று சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியானது. கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளார்கள். 

கிராமியப் பாடல் பாணியில் அமைந்துள்ள கண்டா வரச் சொல்லுங்க, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. யூடியூப் தளத்தில் அதிகப் பார்வைகள் பெற்ற இப்பாடல், வெளியான முதல் 10 நாள்களிலேயே 1 கோடி பார்வைகளைப் (10 மில்லியன்) பெற்றுள்ளது.

தமிழ் ரசிகர்கள் மேற்கத்திய இசை பாணியிலான பாடல்கள் மட்டும் விரும்புவதில்லை, கிராமியப் பாடலுக்கும் அமோக வரவேற்பு அளிப்பார்கள் என்பதை கண்டா வரச் சொல்லுங்க பாடல் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தப் பாடல், கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்ததோடு சந்தோஷ் நாராயணன் திரையிசை வாழ்விலும் ஒரு திருப்புமுனைப் பாடலாகவும் அமைந்துள்ளது. 

இந்நிலையில் கர்ணன் படத்தின் 2-வது பாடல் நாளை (மார்ச் 2) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 அன்று வெளிவரவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.