மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆண் குழந்தைக்குத் தந்தையானார் இயக்குநர் மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2021, 12:13 pm

இயக்குநர் மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். தனது மூன்றாவது படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்குகிறார்.  

மாரி செல்வராஜின் மனைவி திவ்யா. இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அடுத்ததாக ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் மாரி செல்வராஜ். அவருடைய மனைவி திவ்யா, தனக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலைப் பகிர்ந்து இப்புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.