தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மருத்துவப் பணியைத் தொடங்கினார் 'சூப்பர் சிங்கர்' பிரியங்கா!

பாடகியாக இருந்தாலும் மருத்துவப் பணியை விட்டுவிட மாட்டேன் என்று கூறியிருந்தார்...

News image
Updated On :24 மார்ச் 2021, 6:32 am

DIN

திரைப்படப் பின்னணிப் பாடகி பிரியங்கா, பல் மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார். 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம்பெற்று கவனம் பெற்றவர் பிரியங்கா. தமிழ்ப் படங்களில் சில பாடல்களும் பாடியுள்ளார். வைரவன் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பிலும் பாடியுள்ளார்.

2018-ல் பல் மருத்துவம் முடித்தார் பிரியங்கா. பாடகியாக இருந்தாலும் மருத்துவப் பணியை விட்டுவிட மாட்டேன் என்று கூறியிருந்தார். வருங்காலத்தில் மருத்துவமனை கட்டுவதும் அவருடைய கனவாக உள்ளது. 

இந்நிலையில் பல் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கியுள்ள பிரியங்கா, அதுகுறித்து ட்விட்டரில், பல் மருத்துவ சேவையில்  முதல் நாள் என்று குறிப்பிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.