விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிரபல நடிகை கங்கனா ரணாவத்துக்கு கரோனா பாதிப்பு

நீங்கள் பயந்தால் உங்களை அது மேலும் பயமுறுத்தும். அனைவரும் சேர்ந்து கரோனாவைத் தகர்ப்போம்...

News image
Updated On :8 மே 2021, 6:02 am

DIN

பிரபல நடிகை கங்கனா ரணாவத் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கங்கனா ரணாவத், சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வானார். பிரபல நடிகையாக உள்ள கங்கனா பெறவுள்ள 4-வது தேசிய விருது இது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  கங்கனா ரணாவத் நடித்துள்ளார். 

இந்நிலையில் கங்கனாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

நான் சோர்வாக உள்ளேன். கடந்த சில நாள்களாக கண்ணில் எரிச்சலாக உள்ளது. இமாசலப் பிரதேசத்துக்குச் செல்வதற்காகப் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என் உடலில் இந்த வைரஸ் கொண்டாட்டத்துடன் உள்ளது என எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதை நான் எப்படியும் நொறுக்கிவிடுவேன். மக்களே, எதுவும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். நீங்கள் பயந்தால் உங்களை அது மேலும் பயமுறுத்தும். அனைவரும் சேர்ந்து கரோனாவைத் தகர்ப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.