சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இரு பாகங்களாக வெளிவரும் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்!

இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம்.

News image
Updated On :14 மே 2021, 10:40 am

DIN

அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, ஃபஹத் ஃபாசில், அனசுயா பரத்வாஜ் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - புஷ்பா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். இந்திய அளவிலான இந்தப் படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் புஷ்பராஜ் அறிமுகம் என்கிற விடியோ ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். 'புஷ்பராஜ் அறிமுகம்' விடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம். சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கரோனாவால் அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்டதால் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது. புஷ்பா முதல் பாகம் இந்த வருடம் ஆகஸ்ட் 13 அன்று வெளியாகும். அடுத்த வருடம் 2-ம் பாகம் வெளிவரவுள்ளது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.