வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி

கரோனா ஊரடங்கால் வேலையின்றித் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும்...

News image
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
Updated On :25 மே 2021, 10:55 am

DIN

கரோனா ஊரடங்கால் வேலையின்றித் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் நிதியுதவி செய்துள்ளார்கள்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதனால் திரைப்படப் பிரபலங்கள் நிதியுதவி செய்யவேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதேபோல கரோனா ஊரடங்கால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள் உதவவேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் வேண்டுகோள் விடுத்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 1 லட்சமும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 50 ஆயிரமும் நடிகை லதா ரூ. 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் ரூ. 10 ஆயிரமும் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.