தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சூர்யாவின் 'ஜெய் பீம்': பிரபல தெலுங்கு கதாநாயகன் விமர்சனம்

சூர்யாவின் ஜெய் பீம் படம் குறித்து பிரபல தெலுங்கு நடிகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :5 நவம்பர் 2021, 11:47 am

DIN


சூர்யா தயாரித்து, நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ஞானேவல் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடக்கும் இந்தப் படத்தில் அக்காலகட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக பேருந்துகள், பேருந்து நிறுத்தம், நீதிமன்றம் ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக கலை இயக்குநர் கதிருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

Story image

மேலும் இந்தப் படத்தில் ராஜா கண்ணுவாக மணிகண்டனும், செங்கேணியாக லிஜோமோல் ஜோஸும் வாழ்த்திருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி பிரபலங்களும் ஜெய் பீம் படத்தை பாராட்டி வருகின்றனர். 

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய் பீம் படம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, சூர்யாவின் ஜெய் பீம் பார்த்தேன். உங்களுக்கு என் மரியாதை சூர்யா சார். ராஜா கண்ணுவாக நடித்தவரும், செங்கேணியாக நடித்தவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இப்படி ஒரு சிறப்பான படத்தை கொடுத்ததற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.