காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திரையரங்கமா ஓடிடியா?: மோகன்லால் நடித்த 'மரைக்காயர்' பட வெளியீடு அறிவிப்பு

உலகம் முழுக்க டிசம்பர் 2 அன்று...

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:49 am

DIN

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் என்கிற மலையாளப் படத்தில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். (இந்தப் படம் தமிழில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்கிற பெயரில் வெளிவருகிறது.)

2019-ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் தோ்வு செய்யப்பட்டது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்த மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.

மரைக்காயர் படம் முதலில் 2020, மார்ச் 26 அன்று வெளியாகவிருந்தது. எனினும் கரோனா பரவல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தாண்டு ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் மரைக்காயர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்தமுறையும் வெளியிட முடியாமல் போனது. 

மரைக்காயர் படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்தில் அறிவித்தார். திரையரங்குகளில் 50% ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட நிலையில் இதர படங்களுடன் மரைக்காயர் படமும் வெளியானால் லாபம் கிடைக்காது என அவர் காரணம் தெரிவித்தார். மரைக்காயர் படம் திரையரங்கில் வெளியானால் அது ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு அழைத்து வருவதோடு திரைப்பட வியாபாரத்துக்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளரின் அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இதையடுத்து படத் தயாரிப்பாளர் ஆண்டனியுடன் கேரள அமைச்சர் சாஜி செரியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்முடிவில், மரைக்காயர் படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி அதன்பிறகு தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்கிற வேண்டுகோளுக்குச் சம்மதம் தெரிவித்தார் தயாரிப்பாளர். 

இந்நிலையில் மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் திரையரங்குகளில் வெளியாவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் மோகன்லால். உலகம் முழுக்க டிசம்பர் 2 அன்று திரையரங்குகளில் மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். இதனால் இப்படம் குறித்து சமூபகாலமாக நிலவிய குழப்பத்துக்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.