ராஜராஜ சோழன் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நீலப்புலிகள் அமைப்பின் சாா்பில் 2019 ஜூன் 5-இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பேரரசா் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து ராஜராஜ சோழன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாரின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இதையும் படிக்க | ‘கங்கனா ரணாவத்தை கைது செய்ய வேண்டும்’: மகாராஷ்டிர அமைச்சர்
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பா. ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்! படப்பிடிப்புகள் ரத்து

சூசகமான பதிவா? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஜோதிமணி ட்வீட்!

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


