மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்பட ஃப்ரீ-ரிலீஸ் டிரைலர் வெளியீடு

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ஃப்ரீ-ரிலீஸ் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது.

News image
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்பட ஃப்ரீ-ரிலீஸ் டிரைலர் வெளியீடு
Updated On :19 நவம்பர் 2021, 1:01 pm

DIN

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ஃப்ரீ-ரிலீஸ் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த இந்தத் திரைப்படமானது பின்னர் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஃப்ரீ-டிரைலர் வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.