காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

''தமனின் இசை பிடிக்கவில்லை'' : வேறு இசையமைப்பாளரை அணுகிய கதாநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி

தமனின் இசை தனக்கு பிடிக்கவில்லை என பிரபல கதாநாயகன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :19 நவம்பர் 2021, 11:23 am

DIN


'அல வைக்குந்தபுரமுலோ' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக தமன் இருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர உருவாகும் படத்துக்கு தமன்தான் இசையமைப்பாளர். அது மட்டுமல்லாமல், 'ஜிதி ரத்னாலு' பட இயக்குநர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கும் தமனே இசையமைக்கிறார். 

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம், மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' என அவர் இசையமைக்கும் படங்களின் பட்டியல் மிக நீளம். 

சமீபத்தில் தீபாவளிக்கு விஷால் - ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்கு பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டார். இதனைப் போலவே நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜெகதீஸ் படத்துக்கும் தமன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் ஒரு பாடல் மற்றும் பின்னணி இசையை கோபி சுந்தர் மேற்கொண்டிருந்தார். 

தமனுடன் இயக்குநருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தமன் வெளியேறிவிட்டதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் தமன் மனம் திறந்துள்ளார்.

அதில், ''டக் ஜெகதீஷ்' படத்துக்கு பின்னணி இசையமைத்துவிட்டேன். ஆனால் அது நடிகர் நானிக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே அந்தப் படத்தில் இருந்து நான் வெளியேறினேன். நான் என் முழுமனதுடன்தான் அந்தப் படத்தில் பணிபுரிந்தேன். எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை'' என்று விளக்கமளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.