புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அப்பாவான பிக்பாஸ் ஆரவ் : பிரபலங்கள் வாழ்த்து

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவிற்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

News image
Updated On :24 நவம்பர் 2021, 7:06 am

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆரவ். இந்த நிகழச்சியின் டைட்டில் வின்னரானார். முன்னதாக 'சைத்தான்' உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு புகழ் வெளிச்சத்தைக் கொடுத்தது. 

பிரபல இயக்குநரான சரண் இயக்கத்தில் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து அவர் நடித்துள்ள 'ராஜ பீமா' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட ஓவியாவுடன் இணைந்து நடித்துள்ளார். 

Story image

நடிகர் ஆரவிற்கும் கௌதம் மேனனின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் கதாநாயகியாக நடித்த ராஹேயை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இத்தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.