
இயக்குநர் செல்வராகவன் தற்போது தனுஷ் கதாநயாகனாக நடிக்கும் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வாழ்க்கை முடிந்தது, இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார். வேதனை இன்றி விடியல் இல்லை.'' என்று ஒரு பதிவை எழுதியிருந்தார்.
இதையும் படிக்க | அப்பாவான பிக்பாஸ் ஆரவ் : பிரபலங்கள் வாழ்த்து
அதற்கு பதிலளித்த இயக்குரன் சேரன், ''சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதனாக இருப்போம். சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம். வாருங்கள். உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப் போலவே செல்வா'' என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த இயக்குநர் செல்வராகவன், ''அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார். தங்களின் 'ஆட்டோகிராப்' உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்கள் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கலின் ஒருவன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.