மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

'ஜெய் பீம்' படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு

'ஜெய் பீம்' படத்துக்காக நடிகர் சூர்யாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:23 am

'ஜெய் பீம்' படத்துக்காக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது நடிகர் சிவகுமார் உடனிருந்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களில் நடிகர் சூர்யா முற்றிலும் புதிய தோற்றத்தில் இருக்கிறார். இதனையடுத்து இந்தத் தோற்றம் சூர்யாவின் புதிய படத்துக்காக என்று கேள்வி எழுந்துள்ளது. 

Story image
Story image
Story image

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.