கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறாரா ரம்யா கிருஷ்ணன்?

கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறாரா ரம்யா கிருஷ்ணன்?

நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
Published on

நடிகர் கமல்ஹாசன் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில் அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார். மேலும் தெலுங்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு தொகுத்து வழங்கிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. 

இந்தத் தகவலின் உண்மை தன்மை குறித்து நாளைக்கு ஒளிபரப்பாகும் ப்ரமோவில் தெரிந்துவிடும். இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷனுக்காக தாமரை, நிரூப், இமான், பாவனி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா என 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் தாமரை மற்றும் பாவனிக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாம். இதனால் இருவரில் ஒருவர் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com