பிரமிப்பை ஏற்படுத்துகிற ‘மரைக்காயர்’ டிரைலர்!
மோகன் லால் நடிப்பில் உருவான ‘மரைக்காயர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.


மோகன் லால் நடிப்பில் உருவான ‘மரைக்காயர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
மிகப்பெரிய பொருட்செலவில் ஹாலிவுட்டிற்கு நிகரான பிரம்மாண்ட காட்சிகளால் உருவாகியிருக்கிறது ‘மரைகாயர்’. வெளியாவதற்கு முன்பே 3 தேசிய விருதுகளை வென்ற இத்திரைப்படம் நாளை மறுநாள் (டிச.2) திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக மரைக்காயர் உருவாகியுள்ளது.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன் , சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், மோகன்லாலின் மகன் ப்ரணவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...