நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

''அப்றோம் கூப்பிட்டு போய் லவ் பண்ணு'' - யாரை சொல்கிறார்?: புதிய பிக்பாஸ் ப்ரமோ

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

News image
Updated On :4 அக்டோபர் 2021, 8:08 am

DIN

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று மிக பிரம்மாண்டமாக துவங்கியது. இந்த நிலையில் இன்று காலை வெளியான ப்ரமோவில், வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடைபெறுகிறது. முதல் நாள் என்பதால் எல்லோரும் கலகலப்பாக காணப்படுகிறார்கள்

இந்த நிலையில் தற்போது வெளியான புதிய ப்ரமோவில் நடிகர் ராஜு ஜெயமோகன், பிக்பாஸ் அளித்த கடிதத்தைப் படிக்கிறார். பிக்பாஸ் வீட்டின் விதி முறைகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களைப் படமெடுக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 

குளியலறையிலும், கழிவறையிலும் கேமராக்கள் பொருத்தப்படாது. சாதனங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது அபிஷேக் குறுக்கிட, அப்புறமா கூப்பிட்டுபோய் லவ் பண்ணு என்று ராஜூ ஜெயமோகன் நகைச்சுவையாக சொல்கிறார். ஆனால் அவர் யாரை சொல்கிறார் என்று தெரியவில்லை. 

பின்னர் போட்டியாளர்கள் சூழ அமர்ந்திருக்கும் அபிஷேக், 'பருத்திவீரன்' படப் பாடலான சரிகமபதநிச சொல்லித்தாரேன் என்ற பாடலைப் பாட, இசைவாணி தொடர்கிறார். முதல் நாள் என்பதால் வெளியான இரண்டு ப்ரமோவிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.