போத்தீஸ் விளம்பரத்தில் யூடியூப் புகழ் ரித்விக்!

போத்தீஸ் விளம்பரத்தில் யூடியூப் புகழ் ரித்விக்!

ஆறு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் ரித்விக்...
Published on

யூடியூப் தளத்தில் நகைச்சுவை விடியோக்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ரித்விக், போத்தீஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

ரித்து ராக்ஸ் என்கிற யூடியூப் சேனலில் ரித்விக் என்கிற 2-ம் வகுப்பு மாணவனின் நகைச்சுவை விடியோக்கள் வெளியாகி வருகின்றன. 10 நிமிடங்களுக்குக் குறைவாக உள்ள சில நகைச்சுவை விடியோக்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரித்விக். சமீபத்தில் வெளியான பிரேக்கிங் நியூஸ் என்கிற விடியோவை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. பிரேக்கிங் நியூஸில் பல வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ரித்விக். இதையடுத்து பல்வேறு ஊடகங்களில் ரித்விக்கின் பேட்டிகள் வெளியாகின. ரித்து ராக்ஸ் யூடியூப் சேனலுக்கு இதுவரை 15 லட்சம் பேர் ஆதரவாளர்களாக உள்ளார்கள். காஞ்சனா ரிடர்ன்ஸ் என்கிற விடியோவுக்கு மட்டும் 1 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளார் ரித்விக். சரத் குமார் நடித்த நாட்டாமை படத்தை ஞாபகமூட்டும் இந்த விளம்பரத்திலும் தனி ஆளாக, ஆறு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் ரித்விக். விளம்பரம் வெளியாகி ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் யூடியூப் தளத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த விளம்பரத்தைப் பார்த்து ரித்விக்கின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com