வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவுஅண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

'உங்களுக்கு ராஜு முக்கியம்': பிக்பாஸில் கோபமாக பேசிய அபிஷேக், கண்டித்த பிரியங்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் ராஜா கோபமாக பேச, அவரை பிரியங்கா கண்டிக்கிறார். 

News image
Updated On :18 அக்டோபர் 2021, 10:32 am

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் ராஜா கோபமாக பேச, அவரை பிரியங்கா கண்டிக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாடியா சங் வெளியேறிய நிலையில் தற்போது 16 பேர் இருக்கின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறிய நமிதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கிறார். அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிகிறார்கள். சிலை போல் நிற்கும் ஒரு அணியினரை மற்ற அணியினர் சிரிக்கவோ, உணர்ச்சிவப்படவோ வைக்க வேண்டும். 

இந்த நிலையில் இமான் அண்ணாச்சிக்கும் அபிஷேக் ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுத்துகிறது. இமான் அபிஷேக்கைப் பார்த்து, நீ புத்திசாலி என்று சொல்ல, அப்படி சொல்லி என்னை தனியாக்காதீர்கள். உங்களுக்கு ராஜு முக்கியம். எனக்கு வலு இருக்கிறது. நான் வெளியில் போய் எதாவது செய்துகொள்கிறேன். என்கிறார். அப்போது குறுக்கிடும் பிரியங்கா, அதெல்லாம் நீ பேசாதே என சொல்ல, நான் அப்படி தான் பேசுவேன் என அபிஷேக் பதிலளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.