ஷாருக்கான் - அட்லி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய்?
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேவில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவின.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் இந்தியா முழுக்க வெளியாகவுள்ளது. தென்னிந்திய மொழிகளில் நடிகர் விஜய் மிகவும் பிரபலமானவர் என்பதால், நடிகர் விஜய் நடித்தால் இந்தப் படத்தின் வியாபாரத்துக்கு அது பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் பரவியது. பின்னர் அந்த தகவல் உண்மையில்லை என தெரியவந்தது. இந்த முறையாவது ஷாருக்கான் - விஜய் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...