மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

’எனிமி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி. இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

News image

’எனிமி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Updated On :7 செப்டம்பர் 2021, 5:55 am

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி. இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

ஆர்யாவும் விஷாலும் இதற்கு முன் இயக்குநர் பாலாவின் 'அவன் இவன் ' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் . அதிகமும் பேசப்பட்ட அப்படத்திற்கு பின் தற்போது ' எனிமி ' படத்தில் இணைத்திருப்பதாலும் , தற்போது ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம்  ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதாலும்   இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது

இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

'எனிமி' படத்தின் பாடல்களை மட்டுமே தமன் உருவாக்கியுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 


கடந்த ஜுலை மாதம் ' எனிமி ' படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பவை பெற்ற நிலையில் தற்போது வரும் ஆயுத பூஜை அன்று படத்தை  திரையரங்குகளில் வெளியிடலாம்  என படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.
 
இந்தாண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் - 14 ஆம் தேதி வருவதால் ‘எனிமி’ திரைப்படம் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.