தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மீண்டும் கதாநாயகன் - தன் புதிய படத்தின் டப்பிங் பணியை முடித்துக் கொடுத்த செந்தில்

கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகர் செந்தில் தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.

News image
மீண்டும் கதாநாயகன் - தன் புதிய படத்தின் டப்பிங் பணியை முடித்துக் கொடுத்த செந்தில்
Updated On :8 செப்டம்பர் 2021, 7:59 am

DIN

கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகர் செந்தில் தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர காமெடியர்களாக வலம் வந்த கவுண்டமணி-செந்தில் இணை கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் இணைத்து நடித்திருக்கிறார்கள். இருவரின் நகைச்சுவைகளும்  இன்றும் ரசித்துப் பார்க்க கூடிய வகையில் இருந்தாலும் வயது மூப்பு காரணமாக கவுண்டமணி திரைத்துறையில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகர் செந்தில் தற்போது ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.

பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அதன் அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் தன்னுடயை டப்பிங் பணிகளை செந்தில் முடித்துக்கொடுத்திருக்கிறார்.

மேலும் இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.