வசந்த பாலன் இயக்கும் ’அநீதி’ படத்தின் டீசர் வெளியீடு
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை டீசர் இன்று( செப்டம்பர் 10) வெளியானது.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு'அநீதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | வெளியானது ‘அண்ணாத்த’ முதல் பார்வை
ஜெயில் படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் அநீதிபடத்தில் அர்ஜூன் தாஸ், 'சார்பட்டா பரம்பரை' புகழ் துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் 'நேர்கொண்ட பார்வை' வில்லன் அர்ஜூன் சிதம்பரம், ஜேஎஸ்கே சதிஷ்குமார், ஷா ரா, பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார், பவா லட்சுமணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை அர்பன் பாய்ஸ் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

