சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2.5 கோடி பார்வையாளர்களைக் கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை.  இரண்டு வருடங்களுக்கு மேலாக தயா

News image
2.5 கோடி பார்வையாளர்களைக் கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்
Updated On :14 செப்டம்பர் 2021, 9:29 am

DIN

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை.  இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஆகஸ்ட்-3 ஆம் தேதி யூடியூபில் சோனி மியூசிக் பக்கத்தில் வெளியானது .

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் , விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவான " நாங்க வேற மாறி " என்கிற இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடைந்திருந்த நிலையில் தற்போது  2.5 கோடி பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக அதிவேகமாக 10 லட்சம் விருப்பங்களை பெற்றும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.