மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

’அரண்மனை 3’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

News image
’அரண்மனை 3’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated On :28 ஜனவரி 2024, 4:09 am

DIN

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்ட ஹாரர் படங்களில் ஒன்றான ’அரண்மனை’ வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதன்பின் தொடர்ந்து அதன் இராண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது  மூன்றாம் பாகமான  ‘அரண்மனை 3’ தயாராகி விட்டதால் இப்படம் வரும் அக்டோபர்-14 அன்று திரையில் வெளியாகும் என ’ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ அறிவித்திருக்கிறது. 

இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யா.சி இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.