சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நீங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது மிகக் குறைவு - சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டி உருக்கம்

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து நடிகை ஸ்ருஷ்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். 

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 1:09 pm

DIN


சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து நடிகை ஸ்ருஷ்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். தீவு ஒன்றில் 16 போட்டியாளர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். 

இதில் காடர்கள் அணியில் இருந்து இந்திரஜாவும்,வேடர்கள் அணியில் இருந்து ஸ்ருஷ்டியும் எலிமினேஷனுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் காடர்கள் அணியில் இருந்து காயத்ரியும் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றார். இவர்கள் மூவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் வெல்லும் இருவரும் நிகழ்ச்சியில் மீண்டும் தொடரலாம் என்று சொல்லப்பட்டது. 

முதலில் காயத்ரியும், ஷ்ருஷ்டியும் போட்டியிட்ட நிலையில் காயத்ரி வெற்றி பெற்றதால், ஸ்ருஷ்டி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சியில் இறுந்து வெளியேறியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நிங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது மிகவும் குறைவு தான். இந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த நிகழ்ச்சி மிகக் கடுமையானது. உடலும், மனமும் இணைந்து பங்கேற்பது மிக முக்கியம். தோல்விகள் ஒன்றும் தோல்விகள் அல்ல. அவை நம்மை சிறப்பானவற்றை நோக்கி முன் செலுத்தும். 

நான் உங்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இழந்ததற்கு வருத்தம் கொள்கிறேன். ஒரு பயணத்தின் முடிவு என்பது அடுத்த செயலின் துவக்கம். வருங்காலத்தில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன். உங்கள் நேசத்துக்கு நன்றி. அர்ஜூன் சொல்வது போல், வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.