சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

’நான் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டேன்’ வெளியானது வலிமை கிளிம்ப்ஸ் விடியோ

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை.

News image
’நான் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டேன்’ வெளியானது வலிமை கிளிம்ப்ஸ் விடியோ
Updated On :25 செப்டம்பர் 2021, 6:23 am

DIN

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை. 

இரண்டு  வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு பின் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தது.  

பின் கடந்த ஆக-2 ஆம் தேதி அப்படத்தின் முதல் பாடலான 'வேற லெவல்' பாடலை  படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். வெளியானதிலிருந்து தற்போது வரை 2.5 கோடி பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று (செப்-23) மாலை 6.30க்கு வலிமை படத்தின் ’கிளிம்ப்ஸ்’ விடியோ என்கிற பெயரில் சில முன்னோட்டங்களைப் படக்குழு வெளியீடு செய்திருக்கிறார்கள்.

அதிரடி காட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்த விடியோ வைரலாகி வருகிறது.

இப்படம் அடுத்த வருடம் (2022) பொங்கல் அன்று திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.